ஐ.பி.எல். 2021 ஆம் ஆண்டிற்காக கிரிக்கெட் வீரர்களின் ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில், இதுவரை இல்லாத வகையில் தென் ஆப்பிரிக்கா ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸை 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
அவருக்கு அடுத்து, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் – ரூ. 14.25 கோடிக்கு ராயல்ஸ் சேலன்ஜ் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது.
8 அணிகளில் மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன.
ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் இடம்பெற்றுள்ளார்கள். ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக வீரர் ஷாருகானை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 5.25 கோடிக்கும், கிருஷ்ணப்பா கவுதம் ஆல் ரவுண்டரை சென்னை அணி ரூ.9.25 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
கேரளா வீரர் முகமது அசாருதீன் 20 லட்சம் அடிப்படை விலையில் ராயல் சேலன்ச்ஜர்ஸ் பெங்களூர் எடுத்தது.
ஆயுஷ் படோனி, வெங்கடேஷ் ஐயர் ஆகியரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.