Sun. Nov 24th, 2024

தாம்பரம் காவல்துறை ஆணையரான, கூடுதல் காவல்துறை இயக்குனர் ரவி ஐபிஎஸ் உள்பட 4 உயர் அதிகாரிகள் காவல்துறை இயக்குனராக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை அமைச்சர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவின் முழு விவரம் வருமாறு:

சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அம்ரேஷ் பூஜாரி ஐபிஎஸ், தாம்பரம் காவல்துறை ஆணையர் எம்.ரவி ஐபிஎஸ், சிஐடி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் டாக்டர் கே.ஜெயந்த் முரளி ஐபிஎஸ்,

கே.ஜெயந்த் முரளி ஐபிஎஸ்

டெல்லியில் உள்ள போலீஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கூடுதல் காவல்துறை இயக்குனர் கருணாசாகர் ஐபிஎஸ் ஆகிய 4 உயர் அதிகாரிகளும் டிஜிபி எனும் காவல்துறை இயக்குனர் பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கருணாசாகர் ஐபிஎஸ்…