தென் சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்-ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சந்திரசேகரின் புதல்வி மருத்துவர் நித்திலா மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் முனைவர் மகேந்திரன் – அபிராமி ஆகியோரின் புதல்வன் மருத்துவர் கீர்த்தன் ஆகியோரின் திருமண விழாவில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.
மணமக்களுக்கு மரங்கன்றுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
மணவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய முழு உரை இதோ:
திருமண விழாவில், துர்கா ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு,ராஜா, கனிமொழி எம்பி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்பிரியா சுலே, முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.