காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, புதுச்சேரி மாநிலத்தில் இன்று காலை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் செனனை வந்த அவர், விமான நிலையத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் அவசர ஆலோசனை நடத்தினர். காங்கிரஸில் இரண்டு அமைச்சர்கள், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ராகுல்காந்தி கேட்டறிந்தார். பின்னர் அவர் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்று, அங்கு முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட மீனவ மக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, மீனவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து, பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்குச் சென்ற அவர், அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.