தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று திமுக கட்சி அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருப்படத்தை திறந்து வைத்தார். பின்னர், தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பிரதிநிதிகளுடன் கலந்து உரையாடினார்.
இரண்டாம் நாளான இன்று அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ள முதல்வர், பன்னாட்டு அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, அரசின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார். அதன் விவரம் இதோ….