துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தகவல் வெளியான அடுத்த நிமிடமே, செய்தியாளர்களிடம் மகிழ்ச்சிப் பொங்க பேசினார், அம்மாநில முதல்வர் நாராயணசாமி.
“கிரண் பேடியின் நீக்கம் புதுவை மக்களுக்குக் கிடைத்த வெற்றி. மக்கள் உரிமைகளைப் பறிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். தனித்தன்மையைப் பாதுகாக்க சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் அறிவுரையோடு நடத்திய போராட்டத்தின் விளைவு புதுவை மக்களின் உரிமைகள் காக்கப்பட்டிருக்கின்றன.காக்கப்பட்டிருக்கின்றன.
இது மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமின்றி புதுவை மக்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி
புதுவை உரிமைகளைக் காக்கின்ற பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அந்தக் கடைமையை நாங்கள் செய்திருக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் நாராயணசாமி கூறினார்.