Sat. Nov 23rd, 2024

சென்னை தியாகராயநகரில் உள்ள தமிக பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதலுக்கு அக்கட்சித் தலைவர் கே.அண்ணாமலை மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத ரீதியாகவோ அரசியல் சம்பந்தமாகவோ இந்த தாக்குதல் நடைபெறவில்லை என்றும் நீட் தேர்வுக்கு ஆதரவான நிலைபாட்டை பாஜக மேற்கொண்டு வருவதால் எழுந்த கோபத்தின் விளைவாகவாக இந்த தாக்குதல் நிகழ்வு நடைபெற்றுள்ளது என சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.