Sat. Nov 23rd, 2024

கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது
தமிழ்நாடு சுகாதாரத்துறை:

சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தாலே அவர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அறிகுறி உடையவர்கள் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம்.

தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 60வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பரிசோதனை கட்டாயம்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த அறிகுறி இல்லாத நபர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ளத் தேவை இல்லை.

தொற்று உறுதியாகி கோவிட் சிகிச்சை மையங்கள் அல்லது வீட்டு தனிமையில் உள்ளவர்கள் தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தாலே 7வது நாள் முடிந்து தொற்று பரிசோதனை மேற்கொள்ளாமல் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் முழுமையாக குணமடைந்த பிறகு தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டும்- இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது..