Sat. Nov 23rd, 2024

டெல்டா பகுதிகளில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உழவர்களை கண் போல் பாதுகாக்கும் அரசு திமுக அரசு.

ஆட்சிக்கு வந்த உடன் டெல்டா மாவட்டங்களில் 4000கிமீ தூர் வாரப்பட்டது.

இதனால் மழைநீர் பெருமளவில் தேங்காமல் தடுக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு எடுக்கப்படும்.

இயன்ற அளவிற்கு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து பகுதிகளிலும் பயிர் சேதங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

அதிமுக ஆட்சியின் செயல்படாத தன்மையின் காரணமாகவே சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2015 ல் முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்டடதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போல் மீண்டும் நடக்க கூடாது என்ற வகையில் நடவடிக்கைகள் எடுக்கபட்டன.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது முதல்வர் ஸ்டாலின்.

கோவை மாணவி தற்கொலை: குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்.

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது.

சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது.

பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.