முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது தலைமையிலான தமிழக அரசை பாராட்டி வருவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக தமிழ் ஊடகங்களில் நல்லரசு தமிழ் செய்திகள்தான் முதலில் அம்பலப்படுத்தியது.
பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றமும் பிற மாநில உயர்நீதிமன்றங்களும் வறுத்தெடுத்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினையும் தமிழக அரசையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அடிக்கடி பாராட்டி வந்தது மத்திய அரசையும், பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் ஆத்திரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அதன் எதிரொலியாகதான், 20 நாட்களுக்கு முன்பாகவே உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை, முக்கியத்துவம் இல்லாத மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியை மத்திய சட்டத்துறை அமைச்சகம் துவக்கிவிட்டது. அதுதொடர்பாக ஆதாரப்பூர்வமான தகவல் கிடைத்ததையடுத்தே, தலைமை நீதிபதி மாற்றுவதற்கான முயற்சி குறித்த தகவல்களை துணிந்து நல்லரசு செய்தியாக வெளியிட்டது.
விரோதிகளாக இருந்தாலும் வந்தவர்களை வாழ வைத்தே பழக்கம் கொண்ட இனமாக தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஹிந்தி வாலாக்களுக்கு அந்த நற்குணம் எப்போதும் இருந்ததில்லை என்பதை தலைமை நீதிபதியை மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டு இருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்கள்…
வாழ்க வடக்கு….