Sun. Apr 20th, 2025

நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி படிப்படியாக அம்மா உணவகம் திட்டத்தை நீர்த்து போகச்செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அம்மா உணவகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சப்பாத்தி விநியோகத்தை மீண்டும் துவங்கவும், ஏழைகளின் பசி போக்க இத்திட்டத்தை தொடர்ந்து நடத்துவதும் தமிழக அரசின் கடமை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.