Sun. Apr 20th, 2025

லஞ்ச ஒழிப்பு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ……

சோதனை நடைபெற்ற இடங்களில் ஒன்று… விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு….

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், என் வீட்டில் இருந்து தங்க நகை,பணம், சொத்து ஆவணங்கள் என எதையும் போலீசார் கைப்பற்றவில்லை. தன் மீதான புகாரை சட்ட ரீதியாக சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர் என்ற தகவல் வெளியானவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பி. தங்கமணி ஆகியோர் சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் இல்லம் முன்பு தொண்டர்களுடன் அமர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.