Sun. Nov 24th, 2024

தலைமை செயலாளர் வெ. இறையன்பு
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகள் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக, போலீசாருக்கு நல ஆணையம், ஆதிதிராவிடர் நல ஆணையம், மறைந்த தலைவர்களுக்கு மணிமண்டபங்கள், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பான்மையான வாக்குறுதிகள், மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன..அந்த திட்டங்களின் நிலை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கண்காணித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில், துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள், இதில் எத்தனை திட்டங்களை செயல்படுத்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது, எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை தலைமைச் செயலாளர் வழங்கியுள்ளார்.