பெரும்பான்மையான ஊடகவியலாளர்களின் இன்றைய பொழுது, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளோடு முடிந்துவிடும்..
எஞ்சியவர்களில் பலரோ, சிலரோ நடிகை சமந்தாவின் விவாகரத்தின் மீதான அக்கறையிலும், சாட்டை துரைமுருகனின் கைதால் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்று விவாதிப்பதிலும் இன்றைய பொழுதும், தொடரும் நாட்களும் கூட கரைந்து போகலாம்…
இவர்களில் ஒருவராகவே வாழ்ந்து பழகிப் போன எனக்கு நேற்றிரவு முதல், பிரான்சிஸ் கிருபா என்ற மனிதரின் வாழ்க்கை நிறைய கேள்விகளை எழுப்பி கொண்டே இருக்கிறது..
வாழ்தல் என்றால் என்ன? பிரதான கேள்வியாகி குடைந்து கொண்டே இருக்கிறது.
கலைஞர் தொலைக்காட்சிக்கும், ஊடகவியலாளர் கவின் மலருக்கும் நன்றிகள் பல…..
அன்றாட நிகழ்வுகளுக்கு அப்பால்தான் வாழ்தல் இருக்கிறது….
வரலாறாய் வாழ்ந்தவர்…..வாசிப்பிற்குள் சிறை படுத்த முடியாது….