அமெரிக்கா: நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபையின் 76-வது அமர்வில் பிரதமர் மோடி உரை.
தந்தைக்கு டீக்கடையில் உதவி செய்து கொண்டிருந்த நான், தற்போது ஐ.நா.வில் உரையாற்றுகிறேன்.
துடிப்புள்ள ஜனநாயகம் தான் இந்தியாவின் அடையாளம்.
பயங்கரவாதத்தை அரசியல் கருவியாக எடுப்பவர்கள், அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும் என்பதை கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும், இந்தியாவில் வந்து தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.
இந்தியா சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது உலகம் முழுவதும் அதன் தாக்கம் ஏற்படுகிறது.
ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர்.
உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கக்கூடிய டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம்.
மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி மீதான பரிசோதனையும், இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்..