Sun. Apr 20th, 2025

இலவசமாக மாற்று வாக்காளர் அடையாள அட்டையை வரும் அக்டோபர் 1 ஆம் முதல் 342 அரசு இ.சேவை மையங்களில் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுரையை செயல்படுத்திடும் விதமாக இந்த அலுவலகம், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இத்திட்டம் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.