Sun. Apr 20th, 2025

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஆஜராகினார். இதேபோல், வழக்கில் குற்றம் சுமந்தப்பட்ட செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி.கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

முதலமைச்சரின் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் ஐ.பி.எஸ் அலுவலருக்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் மற்றும் முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். டிஜிபி.யின் அறிவுறுத்தலின் பேரில் பெண் ஐபிஎஸ். அதிகாரியை மறித்து மிரட்டியதாக போலீஸ் அதிகாரி கண்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணையின் போது, குற்றம் நிகழ்ந்ததாக கூறப்படும் இடம், விழுப்புரம் தலைமை குற்றவிய நீதிமன்றத்தின் எல்லைக்கு வெளியே இருக்கறிது எனவே, இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.