தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):
சோழிங்கநல்லூர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர் ) தலா 4, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), நுங்கம்பாக்கம் (சென்னை), DGP அலுவலகம் (சென்னை), திருவாலங்காடு (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோவை), பெரம்பூர் (சென்னை), வால்பாறை (கோவை) , திருவள்ளூர் , அயனாவரம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை) தலா 3, செஞ்சி (விழுப்புரம்), பூவிருந்தவல்லி (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), நடுவட்டம் (நீலகிரி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), அரக்கோணம் (ராணிப்பேட்டை), சோலையார் (கோவை), பூண்டி (திருவள்ளூர்) , தேவலா (நீலகிரி), சின்கோனா (கோவை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), பந்தலூர் ( நீலகிரி) தலா 2.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
07.09.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்க கடல் பகுதிகள்
07.09.2021: மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
10.09.2021, 11.09.2021: தென் கிழக்கு, மத்திய வங்க கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதிகள்:
07.09.2021 முதல் 11.09.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்