சட்டப்பேரவையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் இதோ…..
தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவப்படும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சிலை அமைக்கப்படும்.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களுக்கு சிலை.
அஞ்சலையம்மாள் அவர்களுக்கு கடலூரில் திருவுருவச் சிலை.
மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமிக்கு அரியலூர் மாவட்டம் கீழபழுவூரில் சிலை.
ரவீந்திரநாத் தாகூருக்கு சென்னை ராணிமேரி கல்லூரியில் சிலை.
நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் சிலை.
பெண் சமூக சீர்திருத்தவாதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையில் சிலை.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் சிலை.
தமிழறிஞர் மு.வரதராசனார் அவர்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிலை.
சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் ப.சுப்பராயனுக்கு சென்னையில் சிலையும் நாமக்கல் நகரில் அரங்கம் அமைக்கப்படும்.
கீழ்பவானி பாசன திட்டம் உருவாகக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும்.
இதழியலாளர் நிதியுதவி

சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ₹5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி.
அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும்
பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
பனிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிக்கையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி வழங்கப்படும் குடும்ப உதவி தொகை 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்
இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை தொடர்பாக கொள்கை குறிப்புகளை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தாக்கல் செய்து உரையாற்றினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.