Fri. Apr 11th, 2025

சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் காமராஜ் தொற்றில் இருந்து குணமடைந்தார். கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கொரோனோ தொற்று க்கு ஆளான உணவுத்துறை காமராஜ், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.. அங்கு தொடர்ந்து 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ப்பட்டார்..அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.. அவர் விரைவாக குணமடைய வேண்டும் என திருவாரூர் மாவட்ட மக்கள் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.. அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது..

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் அமைச்சர் காமராஜ்.. அவரை சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்,செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அமைச்சர் காமராஜை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்..