Sat. Nov 23rd, 2024

சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் சந்தித்து, திமுக ஆட்சிக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறி அறிக்கை ஒன்றை வழங்கினர்.

பின்னர், கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்திற்கு முன்பு செய்தியாளர்களுடன் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் கூறியதாவது:

ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தது தான் திமுக அரசின் 100 நாள் சாதனை/.

100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படவில்லை. அந்த திட்டத்தை திமுக அரசு முடக்கியுள்ளது.

கொடநாட்டில் அவ்வப்போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுப்பது வழக்கம்.

கொடநாடு வழக்கில் கைதானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளது திமுக அரசு.

நீட் வழக்கில் பொய்யான கருத்தை மக்களிடம் கூறியுள்ளது திமுக.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறார்கள்.

எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வேண்டுமென்றே வழக்கு போட்டுள்ளனர்.

திமுகவின் 100 நாள் ஆட்சியில் மக்கள் வேதனையும், சோதனையும் தான் அடைந்துள்ளனர்;

அதிமுக ஆட்சியில் துவங்கிய திட்டங்கள் வேண்டும் என்றே முடக்கி உள்ளனர்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆளுநர் மற்றும் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.