Sun. Nov 24th, 2024

வேளாண் துறைக்கான தனி நிதி நிலை அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன் விவரம்….

35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காவிரி டெல்டாவில் நெல் சாகுபடி அதிகரித்துள்ளது-

சென்னை கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம் அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரியில் 150 ஏக்கரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கிடு.

சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான 5000 பம்பு செட்டுகள் 70% மானியத்தில் நிறுவப்படும்.

இத்திட்டம் ரூ.114 கோடியே 68 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைப்படுத்த எடப்பள்ளியில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை அமைக்கப்படும்.

ஒட்டன்சத்திரம், பண்ருட்டியில் ரூ.10 கோடி செலவில் நவீன குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.

“பண்ருட்டியில் பலா சிறப்பு மையம்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்க ரூ.4508 கோடி ஒதுக்கீடு.

வட்டார அளவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்கள் ரூ.23 கோடி செலவில் கொள்முதல்.

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விதை நீக்கும் இயந்திரம் நிறுவப்படும்.

20000 ஹெக்டேர் தென்னந்தோப்புகளில் சொட்டுநீர் பாசனமுறை நடப்பாண்டில் ஏற்படுத்த திட்டம்.

இந்த ஆண்டு 17 லட்சம் தரமான தென்னங்கன்று உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் தரப்படும்.

இளைஞர்களின் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட வேளாண நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களின் பட்டியல் இதோ….

வேளாண்மை-நிதிநிலை-அறிக்கையின்-முக்கிய-அம்சங்கள்