அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முறைகேடுகளுக்கு துணை புரிந்த அரசு உயரதிகாரியான மதுராந்தகியின் தந்தை சதாசிவம் வசித்து வரும் திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, சென்னை மாநகராட்சியில் பல நூறு கோடி ரூபாய்க்கு முறைகேடு வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில், எஸ்..பி.வேலுமணிக்கு துணை புரிந்த சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமாருக்கு சொந்தமான அடையாறு மற்றும் அண்ணா நகரில் உள்ள வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முனைப்பான சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கோவையில் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குவிந்துள்ள நூற்றுக்கணக்கான அதிமுக.வினர், லஞ்ச ஒழிப்பு போலீஸின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு குவிந்துள்ள அதிமுக.வினருக்கு சுடச்சுட பொங்கல் உள்ளிட்ட சிற்றுண்டிகள் காலையிலேயே வழங்கப்பட்டுள்ளன. மதிய உணவாக பிரியாணிக்கும் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாப்பிட்டு விட்டு போலீசாருடன் சண்டை போடுங்கள் என எஸ்.பி.வேலுமணியின் தீவிர விசுவாசி அதிமுக தொண்டர்களை உசுப்பேற்றி வருவதாக கூறப்படுகிறது.