Sat. Nov 23rd, 2024

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஓய்வுப் பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் நீதியரசர் ஏ.கே.ராஜன் கருத்து கேட்டார். 86 ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் கருத்துகளை தொகுத்து 165 பக்கத்தில் அறிக்கை ஒன்றை தயார் செய்யப்பட்டது.. அந்த அறிக்கையை இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதியரசர் ஏ..கே.ராஜன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதியரசர் ஏ.கே.ராஜன், பெரும்பான்மையான மக்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு பாதிப்பு குறித்து தெளிவாக அறிக்கையில் விளககியுள்ளோம். அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்ட பிறகுதான் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

குழுவின் தனிப்பட்ட கருத்துகள் எதுவும் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் நீட் வேண்டாம் என்று சொன்னவர்களின் கருத்துகளும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

இவ்வாறு நீதியரசர் ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.