Sat. Apr 19th, 2025

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. :

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், மத்திய அரசின் வரிவிதிப்புக் கொள்கை காரணமாகவும் அண்மைககாலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து 1 லிட்டர் ரூ.100/-ஐத் தாண்டிச் சென்றுள்ளது.

உண்மையில் கடந்த 7 மாதங்களில் ரூ.240/- உயர்ந்து, தற்போதைய உயர்வும் சேர்ந்தால் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.850.50/- ஆக உயர்ந்துள்ளது.

2016ஆம் ஆண்டு சிலிண்டர் விலை ரூ.406/-. இந்த 5 ஆண்டுகளில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.850.50/- எனில் விலை உயர்வு 110 சதவிகிதமாகும்.

கொரோனோ தொற்றின் 2 வது அலை பரவல் வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள இன்றைய நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்கள் முறையே தஞ்சை, திருநெல்வேலி, மதுரை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்ற தகவல் கவலையளிக்கின்றன.

ஆகவே, தமிழக அரசு மேற்கூறிய மாவட்டங்களில் கூடுதலான கவனம் செலுத்தி தொற்று மேலும்பரவாமலிருக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.