சட்டப்பேரவையில் இன்று பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு மூட்டை சிமென்டின் விலை 490 ரூபாயில் இருந்து 460 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதேபோல், மற்ற துறை அமைச்சர்களும் பதிலளித்தனர்.
சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி போடுவதில் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு வெற்றி பெற்றிருக்கிறது..தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இருந்தால் நாளொன்றுக்கு 7 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இயலும்..!
கடந்த ஒன்றரை மாதத்தில், 79,618 புதிய படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது; நாள் ஒன்றுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி எண்ணிக்கை 1,34,926 ஆக உயர்த்தப்பட்டுள்ளது”
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது. 15 எண்ணெய்க் கிணறுகள் அமைக்க அரசிடம் அனுமதி கேட்டிருந்த ஓஎன்ஜிசியின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு..
ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது.. வல்லுனர் குழு அமைக்கப்படும் இக்குழு சுற்றுச்சூழல் மண் உள்ளிட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களுக்கெதிரான ஆய்வறிக்கை கொடுக்கும்.
தமிழகத்தில் ஒரு மூட்டை சிமென்ட்டின் விலை ரூ. 490 லிருந்து ரூ. 460 ஆக குறைக்கப்பட்டுள்ளது..சிமெண்ட் மற்றும் இரும்பு போன்ற கட்டுமான பொருட்களின் விலையை மேலும் குறைக்க அதன் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.