Sun. Apr 20th, 2025

நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பான்மையானோரின் கருத்தாக உள்ளதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் உள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து, தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டோர், நீட் தேர்வு ஏற்படுத்தும் சிரமங்கள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என நிதிபதி ஏ.கே.ராஜன் ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருந்தார்.

இதனையொட்டி, நடிகர் சூர்யாவும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்களும் தங்கள் கருத்தை தைரியாமாக நீதிபதி குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்

இன்று காலை சட்டப்பேரவையில், உரையாற்றி ஆளுநர் புரோகித்தும், நீட் தேர்வை ரத்து செய்வதற்காக சட்டமுன்வரவை பேரவையில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிததார். அவர் கூறியதாவது;

நீட் தேர்வு பாதிப்பு குறித்த தகவலை தொடர்ந்து திரட்டி வருகிறோம்.

நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அனைத்து தரப்பினரின் கருத்துகளை அறிந்த பின் எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

இவ்வாறு நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறினார்.