Sun. Apr 20th, 2025

சாத்தூர் அருகே தாயில்பட்டியில் உள்ள வீடு ஒன்றில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த போது 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. நிகழ்விடத்திற்கு விரைந்துச் சென்ற தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப்பணியில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய 3 பேர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.