Wed. Nov 27th, 2024

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்..அப்போது அவர் கூறியது :

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது

அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது

அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி என குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்

திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு விலக்கு கோரி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது

நுழைவுத்தேர்வு தொடர்பாக குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது திமுக அரசு

குழுவின் அறிக்கையை தொடர்ந்து, நீட் தேர்வு விவகாரத்தில் மேல்நடவடிக்கை

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்பது உறுதி

எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் சொல்லிய படி நீட் தேர்வு பயிற்சியில் குழப்பமில்லை

திமுக ஆட்சியில் இருந்த போது, நீட் தேர்வு அறிவிக்கையை ஏற்கவில்லை

நீட் விலக்கு கோரும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை

நீட் விலக்கு கோரும் தீர்மானங்களுக்கு அதிமுக அரசு போதிய அழுத்தம் தரவில்லை

அதிமுக அரசு போதிய அழுத்தம் தராததால் திருப்பி அனுப்பப்பட்டது தீர்மானங்கள்

நீட் பயிற்சி விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற அதிமுக அரசு போராடவில்லை.. இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்..