Mon. Nov 25th, 2024

சேலத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிர்ப்பலியும் 20,30 என உயரத் தொடங்கியுள்ளது.

இதனால், உயிர்ப் பயத்தில் உள்ள சேலம் மாநகர மக்கள், தடுப்பூசி முகாம்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில், இன்று குமாரசாமிப்பட்டி அரசுமருத்துமனையில் தடுப்பு ஊசி முகாமிற்கு படையெடுத்த மக்கள், ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள முண்டியடித்தனர்.

காலதாமதமாக சென்றால் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்று மக்கள் அச்சத்தோடு காத்திருக்க, தனிமனித இடைவெளியின்றி கூடும் கூட்டத்தால், கொரோனோ தொற்று மேலும் அதிகரித்துவிடுமோ என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சமடைந்தனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறை அதிகாரிகள் முயன்ற போதும், அதனை புறக்கணித்துவிட்டு மக்கள் முன்னேறி சென்றதால், தடுப்பூசி போடும் பணியே பாதிக்கப்பட்டது.