Sun. Apr 20th, 2025

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,764 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொற்று கணிசமாக குறைந்துள்ளதையடுத்து, தொற்று பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,561 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 29,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் சென்னையை விட கோயம்புத்தூரில் தொற்று பாதிப்பு விறுவிறுவென உயர்ந்திருக்கிறது. 4,268 பேர் அந்த மாவட்டத்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, திருவள்ளுர், திருப்பூர், வேலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 98 பேரும், செங்கல்பட்டில் 38 பேரும், கோவையில் 31 பேரும் திருவள்ளூரில் 31 பேரும் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய மாவட்டங்களை உள்ளடக்க தமிழகம் முழுவதும் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரமும், உயிரிழப்பு விவரமும் இதோ…