Sat. Nov 23rd, 2024

வேலூர் மாவட்ட அதிமுக.வில், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் கைதான் ஓங்கியிருக்கிறது என்பது, நிலோபர் கபில் நீக்கத்தில் இருந்து உறுதியாகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும், இப்போதும் திமுக அமைச்சர் துரைமுருகனோடு நெருக்கமாக இருக்கிறார் கே.சி.வீரமணி என்பதும்,இருவரும் தொழில்முறை கூட்டாளிகளாக இருக்கிறார்கள் என்பதும்தான் நிலோபர் கபிலின் நீண்ட நாள் குற்றச்சாட்டு.

கே.சி.வீரமணியுடன் இணக்கமாக போகாததால், நிலோபர் கபிலுக்கு, அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தேர்தலில், ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணியே தோல்வியடைந்தார். நிலோபர் கபிலுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பிறகும் கூட அவர் கட்சிக்கு விரோதமாக வேலை பார்க்கவில்லை. அதனால், வாணியம்பாடி தொகுதியில் அதிமுக.வெற்றிப் பெற்றது.

இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கே.சி.வீரமணி, மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தார்மீக அடிப்படையில் விலகியிருக்க வேண்டும். அல்லது, கட்சித் தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறும் கபிலின் ஆதரவாளர்கள், கே.சி.வீரமணியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நிலோபர் கபிலை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அதேநேரத்தில், அவருக்கு எதிராக கே.சி.வீரமணியின் தூண்டுதலின்பேரில் நிலோபர் கபில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்ட புகாரும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது.

நிலோபர் கபிலை பழிவாங்க வேண்டும் என்று கே.சி.வீரமணி திட்டம் போட்டு செய்து கொண்டிருக்கும் சதிச்செயலுக்கு அதிமுக.வின் இரட்டை தலைமையான இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவரும் துணை போய்விட்டனர் என்று ஆவேசமாக குரல் கொடுக்கிறார்கள் நிலோபர் கபிலின் ஆதரவாளர்கள்.

நிலோபர் கபிலை கட்சியில் இருந்து நீக்கி வெளியிடப்பட்ட அறிவிப்பு….