Fri. Nov 22nd, 2024

கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைப் பெற்ற பின்னர் தாக்கும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தமிழகத்தில் உள்ளவர்களுக்கும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. பூஞ்சை நோய் தாக்குதல் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அதே சமயம் அதுதொடர்பாக பீதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி, பூஞ்சை நோய் தொற்றுக்கு தேவையான மருந்துகளை உடனடியாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை பல ஆண்டுகளாக இருக்க கூட ஒரு பாதிப்புதான் என்றும் கருப்பு பூஞ்சை குறித்து மக்கள் தேவையின்றி பீதியடைய கூடாது என்றும் அவர் கூறியுள்ளளார்.

மேலும் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

கருப்பு பூஞ்சை குறித்த வாட்ஸ் அப் வதந்திகளை நம்ப கூடாது

ஸ்டிராய்ட் எடுப்பவர்கள், சர்க்கரை வியாதி,ஐசியூவில் பல நாட்களாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை ஏற்படலாம்

கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட வேண்டிய நோய்.

யாருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டாலும் மருத்துவமனை நிர்வாகம் பொது சுகாதார இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும்

கருப்பு பூஞ்சை குணப்படுத்த கூடிய நோய்தான்.

இவ்வாறு- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.