கொரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொய்வின்றிமேற்கொள்ளவதற்காக, வசதிப்படைத்தவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக உதவலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவரின் அறிவிப்பை ஏற்று தொழில் அதிபரிகள், திரையுலக பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் நாள்தோறும் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் நிவாரணநிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், சன் டிவி நிர்வாகம் சார்பில் அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ரூ.10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின் போது துர்கா ஸ்டாலின் உடனிருந்தார்.
இதனிடையே, அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் மேலும், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் சார்பில் ஒருமாத சம்பளமும் வழங்கப்படும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.



இதேபோல், நடிகர் ரஜினிகாந்த்தும் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.