Sun. May 4th, 2025

ஜனநாயக கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். புதிய அதிபர் பைடனுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு முன்பாக, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராவது இதுதான் முதல்முறை. மேலும், முதல் கருப்பினத்தவர், ஆசியாவைச் சேர்ந்த முதல் பிரபலம் என்பதையெல்லாம் கடந்து, அவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது சிறப்பான ஒன்று.

அmவரின் தாயார், பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் என்பதால், அங்குள்ள மக்கள், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவை நேரலையில் கண்டு உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.