Mon. Nov 25th, 2024

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நாடாளுமன்றத்தில் புதிய அதிபர் பதவியேற்பு விழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், அந்நாட்டின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார்.

பின்னர், நாடாளுமன்றத்தில் அவர் தொடக்கவுரை ஆற்றினார். அப்போது அவர், அமெரிக்கா ஒரு அக்னிப் பரீட்சையை சந்தித்து கடந்து வந்திருக்கிறது. ஒற்றுமைதான் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்றும் நமக்கும், நம் குழந்தைகளுக்கும் சிறந்த உலகத்தை உருவாக்குவோம். கடினமான தருணங்களை நாம் எப்படி கடக்கிறோம் என்பதை கொண்டு தான் நாம் மதிப்பிடப் படுவோம் என்றும் ஜோ பைடன் கூறினார்.

புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.