Fri. May 3rd, 2024

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுட்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு….

உணவு மற்றும பொதுவிநியோகத்துறைஅமைச்சர் ஆர். காமராஜ் , ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஜன.19 ஆம் தேதி (நேற்று) இரவு 8 மணிக்கு அழைத்துவரப்பட்டார். அவருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது. உரிய சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. அவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.