பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, நான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பிறகு வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், இன்று நண்பகலில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது.
சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை வழங்கினர். இருப்பினும் அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், சிறைச்சாலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சசிகலா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்தாக காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால்
பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறையிலே மருத்தவர்கள்
பரிசோதனை நடத்தினார்கள். அதனைத்தொடர்ந்து, மருத்துவர்கள் அறிவுரைப்படி, சசிகலா பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.