மதுரை கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் மிகவும் சோவியலாக பேசினார்:
நான் எனது முடிவை விரைவில் அறிவிப்பேன்.
நான் எந்த முடிவை அறிவித்தாலும், நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆதரவாளர்களுக்கு அழைப்பு.
திமுகவில் தொண்டனாக இருக்கவே விரும்பினேன்; ஒருபோதும் பதவியை விரும்பியதில்லை.
தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை கலைஞர் வலியுறுத்தி கொடுத்ததால் ஏற்றுக் கொண்டேன்.
பிறந்த நாளுக்காக பொதுக்குழுவே வருக என கட்சியினர் போஸ்டர் அடித்ததில் என்ன தவறு?
ஸ்டாலினுக்கு கூட வருங்கால முதல்வரே வருக என போஸ்டர் அடிக்கிறார்கள்
ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது – மு.க.அழகிரி.
ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று தெரியவில்லை.
ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அவருக்கு கொடுத்தார்.
ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வழங்கப்போகிறேன் என்றார்கள் நான் ஒப்புதல் தந்தேன்-
கருணாநிதியிடம் என்னை பற்றி பொய்களை கூறி கட்சியைவிட்டு நீக்கினர்.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்…