Thu. May 2nd, 2024

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது..

பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது இந்திய ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி..

நான்காவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று ள்ளது..

33 வருடமாக கப்பா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸி.யின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது..ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்றி படைத்த இந்திய அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம் என்று அழைக்கப்படும் பிசிசிஐ…

தமிழக வீரர் சின்னப்பம்பட்டி நடராஜன் கலந்து கொண்ட முதல் சர்வதேச போட்டியே வரலாறு சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது…

நடராஜனுக்கு அங்கீகாரம்…

வெற்றிக் கோப்பையை முதலில் நடராஜனிடம் கொடுத்து கௌரவித்த கேப்டன் ரஹானேவின் உயர்ந்த பண்பு..

சுந்தர் பிச்சையின் பாராட்டு…

டெஸ்ட் தொடரில் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி . வாழ்த்துகள் இந்தியா என சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்தார்்..

டெஸ்ட் தொடரில் வரலாற்றில் இந்தியாவின் மிகச்சிறந்த வெற்றி இது. வாழ்த்துகள் இந்தியா என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ட்வீட் செய்துள்ளார். மேலும் நன்றாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.