Sat. Apr 27th, 2024

தமிழகம் :

இ.பி.எஸ். அறிவிப்பு : விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களைக் கொள்முதல் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை
எதிர்காலத்தில் அரசு செய்ய உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.300 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

கல்விக்கடன் ரத்து : திமுக ஆட்சி அமைந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் – திமுக தலைவர் ஸ்டாலின்.

வழக்குப்பதிவு : பாஜக தலைவர் முருகன், கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு.
பாஜக சார்பில் நடந்த மாநாட்டில் 144 தடையை மீறி கூட்டம் கூடியதாக 3 பிரிவில் புகார் பதிவு.

மீண்டும் கொரோனோ அச்சம்: சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டலில் 85 ஊழியர்களுக்கு கொரோனா
கொரோனா ஹாட்ஸ்பாட்டான சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டல்
10-ஆம் தேதி வரை அந்த ஹோட்டலில் நிகழ்ச்சிகள் நடத்த மாநகராட்சி நிர்வாகம் தடைவிதிப்பு.

வானிலை நிலவரம்: ஜனவரி 5-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.