இதயநோயால் அவதிப்பட்டு வந்த அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இருப்பினும் 93 வயதை எட்டிய நிலையில், வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்..
தனியொரு மனுஷியாக நின்று கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை மிகப்பிரமாண்டமாக கட்டி எழுப்பியதை கண்டு இந்திய மருத்துவ உலகமே வியந்து போனது..சேவை மனப்பான்மையுடன் சிகிச்சை அளித்து வந்தபோதும் புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்தையும் முடுக்கி விட்டவர் சாந்தா அம்மையார்.. மேலும் புற்றுநோய் நோயை முழுமையாக தடுக்கும் ஆராய்ச்சி பணிகளையும் ஊக்கப்படுத்தினார் அவர்.. மொத்தத்தில் புற்றுநோய் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்தவர் சாந்தா அம்மையார் என புகழ்கிறார்கள் மருத்துவ துறை நிபுணர்கள்..
அவரின் மறைவால் அடையாறு மருத்துவமனையே கலங்கி நிற்கிறது…