Mon. Nov 25th, 2024

இ.பி.எஸ். டெல்லி பயணம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கும் முதல்வர், நாளை பிரதமர் மோடி, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்புகளின் போத, தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜன,21,ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறுகிறது என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன்
அறிவித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி, வெற்றி வியூகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையில்லை

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை, புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டத. அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்யும் உத்தரவிட்டது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

புதுச்சேரி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று காலை கூடியது. ஆண்டின் தொடக்கத்தில் முதல் கூட்டமே சிறப்புக் கூட்டமாக கூட்டப்பட்டு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வழக்கமாக ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றம் கூடும்போது, ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்குவது மரபு. ஆனால், துணை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே முட்டல், மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில், புதுச்சேரி காங்கிரஸ் அரசு, தங்களது அரசியல் பலத்தை அதிகரித்துக் கொள்ள, சிறப்புக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.