Sun. May 11th, 2025
நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி விட்டு புதிய அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து ஒதுக்கி கொண்டார்..இதனால் கடும் விரக்தி யடைந்த அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள், கடந்த 30 ஆண்டுகளாக அவருக்காக செலவழித்த பணத்தை ஈடுசெய்ய தி.மு.க அ.தி.மு.க  உள்ளிட்ட கட்சிகளில் இணையத் தொடங்கி விட்டனர்.. தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டச் செயலாளர்கள் நேற்று தி.முக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டார்..இப்படியெல்லாம் நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்திருந்திருக்கிறார் ரஜினி.. அவர்களுக்கு எதிராக பேசினால் தனது புகழுக்கு பங்கம்வந்துவிடும் என்பதுஅவருக்குத் தெரியும்.. அதனால் தான் எங்கிருந்தாலும் வாழ்க என்ற மனநிலைக்கு வந்து இன்று அறிக்கையையும் வெளியிட்டு விட்டார்.. உண்மையில் சகலகலாவல்லவர் ரஜினி காந்த்தான்..