குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங்கரையில் மறைந்த முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலின் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமை சிலை’ என்று புகழப்படும் இந்த சிலையை காண உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். இதனால், அண்மைக்காலமாக இந்த பகுதி, மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது.
இதனால், படேல் சிலை நிறுவப்பட்டுள்ள கேவடியா பகுதியை பல்வேறு மாநிலங்களுடன் இணைக்கும் வகையில், 8 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த ரயில்களின் சேவையை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி மூலமாக இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார