Tue. May 21st, 2024

தமிழகத்தில் கொரோனோ தடுப்பூசி இன்று மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது..முதல் கட்டமாக முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என சுகாதார த் துறை அறிவித்திருந்த நிலையில் மதுரையில் தடுப்பூசி போடும் பணியை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..

தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மையங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் முன்கள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது..மாலை 530 மணியளவில் மாநிலம் முழுவதும் 2,783 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது..ஆனால் முதல் நாள் பதிவு செய்து கொண்ட 16,600 பேரில் சுகாதார பணியாளர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது..பெரம்பலூர் மாவட்டத்தில் 100 பேர் பதிவு செய்திருந்த நிலையில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்..இதில்,கோவிஷீல்டு தடுப்பு மருந்துதான் அதிக எண்ணிக்கையில் செலுத்தப்பட்டுள்ளது.குறைவான நபர்களுக்கே கோவாக்சின் போடப்நட்டுள்ளது.. இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அதை மறுத்த சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பதிலளிக்கும் போது,முன்களப் பணியாளர்களிடம் ஆர்வம் இல்லை என்று கூற முடியாது.. நாளை முதல் பணியாளர்கள் வருவார்கள் என்று தெரிவித்தார்..