Wed. May 22nd, 2024

தமிழகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டததை, மதுரை அரசு மருத்துவமனையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். முதல் தடுப்பூசியை தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர் செந்திலுக்கு போடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர், தடுப்பூசி மிகுந்த பாதுகாப்பானது. தடுப்பூசி பற்றி பரவும் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு 42 நாட்கள் மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதேபோல், சென்னை அரசு ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கோவிட் 19 தடுப்பூசி போடும் முகாமை, அதன் முதல்வர் ஜெயந்தி தொடங்கி வைத்து முதல் தடுப்பூசியை மருத்துவமனை போட்டுக் கொண்டார். மேலும், அவரது முன்னிலையில் முன்களப் பணியாளர் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.