உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்தப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, அலங்காநல்லூரில் முனியாண்டி கோவில் காளைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். வாடி வாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் தீரத்துடன் போட்டி போட்டுக் கொண்டு பிடித்து வருகின்றனர். அதனை ஏராளமான பார்வையாளர்கள் ஆரவாரம் செய்து பார்த்து ரசித்தனர். போட்டியில் 700 மாடுகளும் 650 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக, ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மதுரை ஆட்சியர் அன்பழகன் உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஏற்றனர்.
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.