Thu. May 15th, 2025

சர்வதேப்போட்டியில் இடம் பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன், முதல்முறையாக ஆஸ்திரேலிய சுற்றப் பயணத்தில் இடம் பெற்றார். 29 வயதே ஆன அவர், கடந்த மாதம் 2 ஆம் தேதி காம்பெராவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இடம் பெற்று, 10 ஓவர் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேபோல், டி- 20 போட்டியிலும் நடராஜன் பந்து வீசினார். தொடர்ந்து,
பிரிஸ்பேனில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள தமிழக வீரர் யார்க்கர் நடராஜன், தனது 20 ஓவரில் 63 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இப்படி முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இடம் பெற்ற இந்திய வீரர் ஒருவர், ஒருநாள் போட்டி, டி.20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என்று மூன்று வகையான போட்டிகளில் இடம் பிடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை நடராஜன் பெற்றுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் புகழாரம் சூட்டியுள்ளது.