Wed. May 1st, 2024

முன்களப்பணியாளர்களுக்கு நாளை தடுப்பூசி

தமிழகத்தில் நாளை 166 இடங்களில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தலைசிறந்த 10 மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காளைப் பிடி வீரர்களுக்குப் பரிசு

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 மாடுகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் முதல் பரிசாக காரை வென்றார். 17 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் இரண்டாவது இடத்தை பிடித்தார். 10 காளைகளை பிடித்த மேட்டுப்பட்டி கார்த்திற்கு மூன்றாவது இடத்திற்குரிய பரிசு வழங்கப்பட்டது.

கர்நாடகாவில் விபத்து 11 பேர் பலி

கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.தவனகரே பகுதியிலிருந்து அதிகாலை 17 பேர் சுற்றுலா வேன் ஒன்றில் கோவா நோக்கிச் சென்றுள்ளனர்.லிட்டிகட்டி என்ற இடத்தின் அருகே எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

ஆபாச யூ டியூப் சேனல் முடக்கம்

யூ டிபூய் சேனல் முடக்கம் ஆபாச பேட்டி எடுத்த யூடியூப் சேனல் முடக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளார் துணை ஆணையர் (அடையாறு)விக்ரமன். பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்தாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.அடையார் துணை ஆணையர் விக்ரமன் அளித்த புகாரின் பேரில் யூடியூப் நிறுவனம் அந்த சேனலை முடக்கியது.

நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.